தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் சோப்பு போட்டு கை கழுவும் முறை குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கப்பயிற்சி அளிக்கப்பட்டது.
எட்டையாபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லால்பகதூர் கென்னடி தலைமை வகித்தார்.
ஆசிரியை அன்புத்தாய் அனைவரையும் வரவேற்றார்.
சுகாதார பயிற்சியாளர் முத்துமுருகன் கலந்து கொண்டு சோப்பு போட்டு கை கழுவும் முறை குறித்தும் சுகாதார பழக்கவழக்கங்கள் குறித்தும் செயல்விளக்கப்பயிற்சி அளித்தார். சுகாதாரம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்த மாணவர்களுக்கு சோப்பு பரிசாக வழங்கப்பட்டது.
இதில் பள்ளி ஆசிரியர்கள் ஜோசப் ஆசீர், எப்சி,ஜானகி, பிரியா, உள்பட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை ஜான்சி ராணி நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.