எட்டயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மெயின்பஜார், மேலவாசல், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை எட்டயபுரம் பேரூராட்சி உதவி இயக்குனர் அறிவுறுத்தலின்படி செயல் அலுவலர் சுப்பிரமணியன் ஆலோசனையின் படி சுகாதார மேற்பார்வையாளர் சரவணன்,0. சுகாதார ஆய்வாளர் பூவையா மற்றும் அதிகாரிகள் பணியாளர்களுடன் மேலவாசல்,பஜார் பகுதியில் உள்ள காய்கறி கடை, இறைச்சி கடை ஆகிய பகுதிகளில் இருந்த பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து 20 கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
மேலும் மக்காத நெகிழி பொருள்களைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. இவை மண்ணின் வளத்தை சிதைப்பதுடன், நிலத்தடி நீா்மட்டத்தையும் வெகுவாகப் பாதிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.