கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் நின்று கொண்டு இருந்த நபர் மற்றும் லாரி மீது அசுர வேகத்தில் மோதிய தனியார் பேருந்தின் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கோவை – மேட்டுப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோவை மாநகருக்கு வந்து செல்கின்றனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு அதிக அளவில் தனியார் பேருந்துகள் இயங்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக உரிய நேரத்தில் அதிக பயணிகளை ஏற்றிக்கொண்டு வருமானத்தைப் பெருக்க தனியார் பேருந்துகள் அசுர வேகத்தில் இயங்கி வருகிறது.
இதனால் பல விபத்துகளும் நடந்து வருகிறது. போக்குவரத்து மற்றும் காவல் துறையினர் ஆய்வு செய்து சோதனை செய்தாலும் பின்னர் மீண்டும் இதே போன்று அசுர வேகத்தில் தனியார் பேருந்துகளை இயக்குகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை காரமடை பகுதியில சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் வாகனத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு முட்டை வியாபாரி சாலையைக் கடக்க முயன்றார். அவர்களுக்கு முன்பு லாரி ஒன்று நின்று கொண்டு இருந்தது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து அதிவேகத்தில் கோவை நோக்கி வந்த தனியார் பேருந்து அந்த இருவர் மீது மோதி விட்டு லாரி மீதும் மோதி டிவைடரில் மோதி நின்றது.
இந்த விபத்து நடந்த காட்சிகள் அங்கு உள்ள கடையில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த விபத்து குறித்து காரமடை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.