கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் அருகே உள்ள சின்னக்கானல் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட மிக முக்கியமான சுற்றுலாத்தலான கொழுக்குமலை. இங்கு அன்றாடம் சுற்றுலா பயணிகள் வந்து ஜீப் சபாரி மூலமாக உயர்ந்த மலைக்கு சென்று இயற்கை அழகை கண்டுகளித்து வருவது வழக்கம்.
தற்போது அப்பகுதியில் சுற்றுலா தளமாக அறிவிக்காமல் இழுத்தடிப்பாகவும் அப்பகுதியில் வாழ்வாதாரமாக கருதி கொண்டிருக்கிற ஓட்டுநர்கள் வாழ்க்கையை அழிப்பதாகவும் ஜீப் ஓட்டுநர்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர். முன்பதாக இங்கு சிறப்பாக வாகனங்களை ஓட்டுவதற்கு இரண்டு வருடம் முன் அனுபவம் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் சுமார் 196 வாகனங்கள் சின்னக்கானல் பஞ்சாயத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் அனுமதி பெற்றிருக்கின்றன.
தற்பொழுது போக்குவரத்து துறை உத்தரவின் பெயரில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை பிட்னஸ் சான்றிதழ் வாங்க வேண்டும் என்று கூறினார் அதை ஏற்றுக் கொண்டு அதை தொடர்ந்து சின்னகானல் பஞ்சாயத்திற்கு அளித்து வருகின்றனர் அதில் சரியான சான்றிதழ் காண்பிக்கப்படாத வாகனங்கள் நிறுத்தப்படவும் செய்கின்றன.
ஆனால் தற்பொழுது 5 வருடம் ஓட்டுனர் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என ஐந்து வருடமாக மாற்றப்பட்டது இதனால் பகுதியில் பல குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றன.
நேற்று சின்னக்கானல் கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு முன்பாக அனைவரும் வாகனங்களை நிறுத்தி போராட்டம் செய்தனர். இதற்கு சரியான முடிவு எடுக்கப்படவில்லை என்றால் மேலும் போராட்டம் வழுபெரும் என்றும் தெரிவித்துள்ளார்.
மக்களின் நலனை கருத்தில் கொண்டு கேரள அரசு உடனடியாக நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் வாழ்வாதாரத்தை தேடி காத்துக் கொண்டிருக்கும் ஓட்டுநர்களின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணாறு.