தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோட்டநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி திருக்கோவிலில்,
ஆடி மாத கொடை விழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பூக்குழி இறங்கி ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் கொடை விழாவை முன்னிட்டு ஸ்ரீ கள்ளழகர் மற்றும் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து இக்கோவிலின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் “அரிவாள் மேல் ஏறி நின்று அருள்வாக்கு கூறும் நிகழ்வு” நடைபெற்றது. குறிப்பாக இந்நிகழ்வை காண வேண்டும் என்பதற்காக விளாத்திகுளம் பகுதி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து பூக்குழி இறங்குதல் மற்றும் அரிவாள் மேல் ஏறி நின்று அருள்வாக்கு கூறும் நிகழ்வினை கண்டு களித்து தரிசனம் செய்து சென்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ந.பூங்கோதை,சரவணக்குமார்.