கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் தொழில் செய்வோருக்கு பெரும் சிரமமாக உள்ளது. இது ஒரு புறம் இருக்க இன்று காலை போத்தனூர் கோண வாய்க்கால் பாளையம் அருகே உள்ள நொய்யல் ஆற்றில் வாகன ஓட்டி ஒருவர் ஆற்றை கடக்க முயன்ற பொழுது அவரது இருசக்கர வாகனம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டி உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைவாக வந்த தீயணைப்புத் துறையினர் அந்த வாகனத்தை ஆற்றில் இருந்து மீட்டு கொடுத்துள்ளனர்.
வாகன ஓட்டி சக்தி கூறுகையில்;”நான் போத்தனூர் பகுதியில் வசித்து வருகிறேன். இந்தப் பகுதியில் ஆற்றை கடக்கும் பொழுது எனது இருசக்கர வாகனம் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. நான் கவனமாக இருந்ததால் தப்பிவிட்டேன் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளேன். தகவல் கொடுத்தவுடன் தீர்ப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து
எனது வாகனத்தை உடனடியாக மீட்டுத் தந்து உள்ளார்கள்.
இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி இந்த பகுதியில் நடப்பதால் அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இதற்கு பாலம் அமைத்து தர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.”
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அப்துல் ரகுமான்.