கோவை விமானநிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் வரும் பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்புவது வழக்கம். மேலும் இந்த பணிக்கு தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் செக்யூரிட்டி பணிக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று விமான நிலையத்தில் அதிகாரிகள் மற்றும் செக்யூரிட்டிகள் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து கொண்டிருந்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
செக்யூரிட்டி சிவக்குமார்(58) என்பவர் பயணி ஒருவரின் பேக்கை வாங்கி ஸ்கேனிங் மெசினுக்குள் அனுப்பி சோதனை செய்தார். அப்போது அவர் பேக்கில் இருந்த 660 ரூபாயை நைசாக திருடினார். இதனை பார்த்த பயணி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தார் . இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அஜய்குமார்(39), பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் பயணியிடம் பணம் திருடிய சூலூர் செங்கத்துறையை சேர்ந்த செக்யூரிட்டி சிவக்குமாரை கைது செய்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.