கோவை, தடாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தடாகம் காவல் நிலைய காவல் துறையினர் திருவள்ளுவர் நகர் அருகே சென்று சோதனை மேற்கொண்ட போது புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்து இருந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் (47) மற்றும் துடியலூர் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் (51) ஆகியோர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூபாய் 2,20,000/- மதிப்புள்ள 221 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.