கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி கோவை கோட்டைமேடு பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது.
அன்றைய நாளில் சிறப்பான நிகழ்வாக கோவை கோட்டை மன்ப உல் உலூம் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் நினைவுகளை மீண்டும் புதுப்பிக்கும் புகைப்படக் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சில தருணங்களும், நிகழ்வுகளும் வரலாற்று சிறப்புமிக்கது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அந்த வகையில் மிகச் சிறப்பான மற்றும் திரளான வகையில் சுமார் பல்லாயிரக்கணக்கான முன்னாள் மாணவர்களும், நூற்றுக்கணக்கான ஆசிரியர்களும் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சி நமது மன்ப உல் உலூம் மேல்நிலைப்பள்ளி வரலாற்றில் முதன் முறையாக நடைபெற்றது மிக முக்கிய நிகழ்வு ஆகும்.
அந்த நிகழ்ச்சியின் மூலமாக நெகிழ்ச்சியான பல தருணங்கள் அரங்கேறியது. பல்வேறு நட்புகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. மாணவர்கள் தாங்கள் பயின்ற வகுப்பறைகளில் அமர்ந்து பழைய நினைவுகளை அசைபோட்டது எல்லோரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சமூகத்திலும் கல்விச் சூழலில் ஆக்கப்பூர்வமான அதிர்வுகள் இதன் மூலம் உண்டானது.
முன்னாள் மாணவர்களுக்கு பள்ளியுடன் இணைப்பும் நெருக்கமும் பாசப்பிணைப்பும் நட்பும் மீண்டும் துளிர்த்தது.
மேற்கண்ட “மீண்டும் பள்ளிக்கு போகலாம்” என்கின்ற மைய கருத்தில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வை ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைத்தது.
சரி, இது இதுவரை நடந்த வரலாறு.
மீண்டும் ஒருமுறை அதேபோல் ஒரு நிகழ்வு நம்முடைய மன்பஉல் உலூம் பள்ளிக்கூடத்தில் நடைபெற உள்ளது.
“மீண்டும் பள்ளிக்கு போகலாம் 2.0” என்கின்ற தலைப்பில் மீண்டும் ஒரு நிகழ்வையும் ஒருங்கிணைக்க ஒருங்கிணைப்புக் குழு ஆயத்தம் ஆகியுள்ளது.
இதற்காக வேண்டி ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள் நமது மன்பஉல் உலூம் பள்ளிக்கூடத்தை நிர்வகித்து வரும் கோட்டை ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிஹிய்யா ஜமாஅத் தலைவர் இனாயத்துல்லா ஹாஜியார் அவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பை மேற்கொண்டார்கள்.
2025 ஜனவரி ஒன்று அன்று நிகழ்வை நடத்துவதற்கு உண்டான அனுமதி கோரி கடிதத்தையும் அளித்தார்கள்.
மேலும் நடைபெற உள்ள முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுவதற்கு உண்டான காரணம் என்ன ? அதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்ற ஆக்கப்பூர்வமான நல்ல விளைவுகளும் அம்சங்களும் என்னென்ன என்பதை பற்றியும் விளக்கினார்கள்.
ஜமாத்தினர்கள் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்கள். அடுத்து வருகின்ற நிர்வாக கூட்டத்தில் அமர்ந்து பேசி ஆலோசித்து முடிவை சொல்வதாக கூறியுள்ளார்கள்.
சந்திப்பு மிக திருப்தியாக இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
சமூகத்தின் கல்விச் சூழல் வளர்ச்சி பெற்று, கல்வியின் மீதான பார்வையும் அணுகுமுறையும் மேம்பட்டிடவும், மாணவர்களின் கல்வி நிலை உயரவும், 75 ஆண்டுகளுக்கு மேலாக கோவையின் கல்வித் தளத்தில் முக்கிய அம்சமாக விளங்கும் நம்முடைய மன்பஉல் உலூம் பள்ளிக்கூடத்தின் மாண்பும் பெருமையும் வளர்ச்சியும் மென்மேலும் ஓங்குவதற்கும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த வேண்டும் என்கின்ற ஆவலை ஒருங்கிணைப்பு குழு வெளிப்படுத்தியது.
தற்போது பல்வேறு ஆண்டுகளின் முன்னாள் மாணவர்கள் குழுவாக சங்கமித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஆலோசித்து அனைவரது பங்களிப்பையும் பெற்று சிறப்பான ஒரு நிகழ்வாக நமது பள்ளிக்கூடத்தின் முன்னாள் மாணவர்கள் – ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்திட உங்கள் துவாக்களிலும் எண்ணங்களிலும் நிய்யத்து வையுங்கள் என்று அன்போடு கோருகிறோம்
எல்லா புகழும் இறைவனுக்கே..!
ஒருங்கிணைப்பு குழு,
முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள்,
மன்ப உல் உலூம் தொடக்கப்பள்ளி & மேல்நிலைப்பள்ளி,
கோட்டை, கோவை.1
Manbaul Uloom Higher Secondary School (G)old Students
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜாபர் தொண்டாமுத்தூர்.