தேவிகுளம் சாலை
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாரின் சுற்று வட்டார பகுதிகள் அனைத்திலும் ஏராளமான மண் சரிவுகள், மரம் சாலையில் விடுவது நீர் அருவிகள் அனைத்தும் நிரம்பி வழிவது, போக்குவரத்து தடைப்படுவது போன்ற நிகழ்வுகள் நேற்று இரவு பெய்த மழையில் பேராபத்துகள் அதிகரித்து வருகின்றது.
பழைய மூணாறு மைதானம்
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பள்ளிவாசல் சாலை
மூணாறு புதிய காலனி, இக்கா நகர் ஆகிய பகுதிகளிலும் மண் சரிவுகளும் ஏற்பட்டது. ஓரிரு வீடுகளுக்குள்ளே நீர்த்தேக்கங்களும் வந்தது. மூணாரின் சுற்று வட்டார அனைத்து சாலைகளிலும் மண் சரிவுகள் ஏற்பட்டது மூணாறில் இருந்து உடுமலை செல்லும் சாலையில் கன்னிமலை தேயிலை தொழிற்சாலை, வாகுவாரை தேயிலைத் தொழிற்சாலை ஆகிய தொழிற்சாலைகளுக்கு முன்பு மண் சரிவுகளும் ஏற்பட்டது இடையிலாகவே மரங்களும் விழுந்து கிடந்தது. பழைய மூணார் மைதானம் , வாகனங்கள் நிறுத்தும் மைதானம் முழுவதும் சாலையிலும் தண்ணீர்கள் தேங்கிக்கிடந்தது. இதன் பாகமாக ஹைட் ஒர்க்ஸ் டாமின் நீர்மட்ட உயர்வு காரணமாக முதிரப்பழா ஆறில் தண்ணீர் திறக்கப்பட்டது. மாட்டுப்பட்டி அணையின் நீர்மட்ட உயர்வு காரணமாக நேற்று இரண்டு ஷட்டர்கள் திறந்த நிலையில் இன்று மூன்றாவது ஷட்டரும் அந்த அணையிலும் தண்ணீர் திறக்கப்பட்டது. மூணாறில் இருந்து லட்சுமி எஸ்டேட்டுக்கு செல்லும் பாதையில் நாகர் மூடி டிவிஷன் அருகில் மண்சரிவு ஏற்பட்டது, அந்த சாலையில் வாகனங்கள் பயணிக்க முடியாத அளவிற்கு மண்சரிவு ஏற்பட்டது. மூணாறில் இருந்து அடிமாலை செல்லும் சாலையில் பள்ளிவாசல் அருகில் மண் சரிவுகளும் மரங்களும் விழுந்து கிடந்தன. மூணாறில் இருந்து கோவிலூர் வட்டவாடை சாலையில் புதுக்கடி, மற்றும் எக்கோபாய்ண்ட் அருகில் மண் சரிவுகளும் ஏற்பட்டது. இதுவரை மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்தும் எந்த வித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை. மூணாறு தேவிகுளம் சாலையில் பழைய அரசு கல்லூரி அருகே மண்சரிவுகள் ஏற்பட்டது மற்றும் கேப் ரோடு பகுதிகளிலும் மண்சரிவு ஏற்பட்ட முழுவதுமாக போக்குவரத்து தடைப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-மணிகண்டன் கா
மூணாறு, கேரளா