மூணாறில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் ஆம்புலன்ஸ் சேவையை முறியடிப்பதற்காக ஏராளமான நபர்கள் மறைமுகமாக தாக்க முயற்சிக்கின்றனர்!!!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மிகப் பிரபலமான சுற்றுலா தளமான மூணாறு பகுதியில் மூணாறு மக்களுக்காக மூணாறில் டூரிஸ்ட் அசோசியேஷன் தலைமையில் ஆம்புலன்ஸ் சேவை கடந்த 16-06-2024 அன்று சேவை மூணாறு மக்களுக்காக காந்தி சிலை அருகில் வைத்து சேவை துவங்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மூணாறு டூரிஸ்ட் நைட் கைடு அசோசியேஷன் தலைமையில் துவங்கப்பட்ட இந்த ஆம்புலன்ஸ் சேவை மூணாறு மக்களுக்காக இலவசமாகவே சேவைகள் நடத்தி வருகின்றது. தொடர்ந்து சேவை துவங்கி ஒரு மாத நிறைவில் 25 அவசர சேவைகளை இயக்கியுள்ளது, இவர்களின் லட்சியமாக கூடுதல் பணம் வசூலிப்பதில்லை வாகனத்தில் பயணிக்கும் நோயாளிகள் உறவினர்கள் விரும்பி தரும் பணத்தை மட்டுமே இவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். மூணாரில் 108 போன்ற ஆம்புலன்ஸ் சேவைகள் இருந்தாலும் இவைகளும் அனைத்து நேரங்களும் சேவையை இயக்குவதும் கிடையாது. ஃப்ரீசர்கள் இலவசமாகவும் கொடுப்பதும் கிடையாது ஆனால் நமது மூணாறு நைட் கைடு அசோசியேஷன் தலைமையில் இயக்கப்பட்ட ஆம்புலன்ஸ் சேவையில் பிரீசர் இலவசமாகவே வழங்கப்படுகிறது இது போல இலவசமாக சேவையை நடத்துவதன் காரணமாக பல நபர்கள் காவல்துறையினிடம் புகார்களை எழுப்பி வந்துள்ளனர். இப்படியாகவே மறைமுகமாக மூணாறு நைட் கைடு அசோசியேஷன் தலைமையில் இயங்கும் ஆம்புலன்ஸ் சேவை முறியடிப்பதற்கு முயற்சித்து வருகின்றனர். நேற்றைய தினம் மதுரை ராஜகிரி மருத்துவமனைக்கு ஒரே நோயாளியை கொண்டு சென்ற வாகனம் திரும்பி வரும் பொழுது தான் வாகனத்தில் கஞ்சா போதை பொருள்கள் இருப்பதாக மூணாறில் இருந்து பொய்யான புகார்கள் எழுந்து வாகனத்தை தேனி மற்றும் போடி போடி மெட்டு ஆகிய மூன்று பகுதிகளில் வாகனத்தை நிறுத்தி தமிழ்நாடு காவல்துறையினர் சோதனையை மேற்கொண்டனர் சோதனையில் ஒன்றும் கிடைக்கவில்லை எதற்காக சோதனை என்று வாகனத்தில் பயணித்த வாகன ஓட்டுநர் அதிகாரிகளிடம் பேசும் பொழுது அதிகாரிகள் மூணாறில் இருந்து நீங்கள் போதை பொருட்களும் மற்றும் சந்தன கட்டை போன்ற பொருட்களை ஆம்புலன்ஸ் மூலம் கடத்துவதாக புகார்கள் எழுந்தது எனவே வாகனத்தை சோதனை
நடத்தினோம் என வாகன ஓட்டுனரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

மூணாறில் இதுவரை பல அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வம் கொண்ட நபர்கள் இருந்தாலும் இவர்கள் பொது சேவையான ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ சேவைகளில் ஈடுபடுவது கிடையாது. இலவசமாக ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ சேவைகளில் உதவி புரிவது மூணார் டூரிஸ்ட் நைட் கைட் அசோசியேசன் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக மூணாறு நைட்‌ கைடு அசோசியேஷன் தலைமையில் ஒரு காத்திருப்பு நிலையத்தில் பஞ்சாயத்து தலைவரின் உதவியுடன் கட்டப்பட்டிருந்த அலுவலகத்தை காவல்துறையினர் தாக்கியும் மற்றும் 9 நபர்களை தாக்கியும் சேவைகளை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.

இதன் பின்னணியாக மூணாறு பகுதியில் ஏதாவது ஆபத்துகள் நேரிட்டால் அடிமாலி இரும்பு பாலம் போன்ற பகுதிகளில் இருந்து ஆம்புலன்ஸ் சேவைகளை வரவழைக்க முடிகிறது. இப்படியாக இவர்கள் வருவதன் மூலம் அதிகமான பணத்தையும் வசூலித்து செல்கின்றனர் மற்றும் தாமதித்து வருவதன் காரணமாகபல உயிர்களும் பறிபோகின்றது. இப்படியான நிகழ்வுகள் அதிகமாக ஏற்படக் கூடாது என்பதன் காரணமாகவே மூணாறு நைட் கைடு அசோசியேஷன் தலைமையில் இலவச ஆம்புலன்ஸ் சேவை மூணாறு மக்களுக்காகவே துவங்கப்பட்டது.தற்பொழுது 25 நபர்கள் மீது புகார்கள் எழுப்பப்பட்ட கைது செய்யும் எண்ணத்துடன் போலீஸார்கள் மூணாறு டவுனில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக.

-மணிகண்டன் கா
மூணாறு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp