கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணாறு பகுதிகளில் தற்பொழுது தென்மேற்கு பருவமழை காலநிலை காரணமாக அதிகமாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் ஆங்காங்கே சிறிய நிலச்சரிவுகள் மற்றும் பெரிய நிலச்சரிவுகளும் மரங்கள் சாய்ந்து, சாலைகள் பழுதடைந்தும் காணப்படுகின்றன.
எனவே பொதுமக்கள் அனைவரும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியளார் தெரிவித்துள்ளனர்.
பல சாலைகள், கேப் ரோடு போன்ற தேசிய நெடுஞ்சாலைகளிலும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் இயக்க தடை செய்யப்பட்டுள்ளது எனவே வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லவும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும் வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுவாக அதிகமான மழை தேவிகுளம் பகுதிகளில் பதிவாகியுள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப் பகுதிக்கு சுற்றுலாவிற்கு செல்ல விருப்பம் சுற்றுலா பயணிகள் தற்பொழுது சுற்றுலா செல்லுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-ஜான்சன் மூணாறு.
One Response
You message all. Good Thanks