2023 -24 ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வேளாண்மை துறை,, தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்படும் திட்டங்கள் ஒளிவு மறைவு இன்றி விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் , வரும் ராபி பருவத்திற்கு மக்காச்சோளம் கம்பு சோளம் உள்ளிட்ட பயிரிடிய சாகுபடி செய்ய வீரிய ஒட்டு ரக விதைகளை தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலக்கரந்தை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்ட வருவதால் மேலக்கரந்தை பகுதியில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அரசு மருத்துவமனை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையில் வலியுறுத்தி விவசாயிகள் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலக்கரந்தையில் மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எட்டையாபுரம், முத்துலாபுரம், மேலக்கரந்தை, படர்ந்தபுளி, புதூர், காடல்குடி உள்ளிட்ட பிர்காவுக்கு உட்பட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் மதுரை -தூத்துக்குடி நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகளையும் 3 பேருந்துகளில் கைது செய்து மேலக்கரந்தையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
ஆனால் கைது செய்து அடைக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு இந்த மண்டபத்தில் போதிய வசதிகள் இல்லை என்று மண்டபத்தின் வெளியே நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர், அதன் பின் காவல்துறையினர் அனைத்து விவசாயிகளும் மற்றொரு மண்டபத்தில் அடைத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.