ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு 26.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 51 பயனாளிகளுக்கு ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார்.
தமிழக முதல்வர் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வந்து செயலாற்றும் வகையில் அறிவித்துள்ள ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஓட்டப்பிடாரம் வட்டார பகுதிகளுக்கு சென்று அனைத்து துறை அலுவலகங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து இன்று ஆய்வு செய்தார்.
இதில் ஓட்டப்பிடாரம் அருகே முறம்பன் கிராமத்தில் உள்ள குளத்தில் 36 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு செய்தார்.
தொடர்ந்து ஓட்டப்பிடாரம் வ உ சி அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தினை உணவருந்தி ஆய்வு செய்து உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் உள்ள மேசை கணினி மற்றும் அதிநவீன தொலைக்காட்சி பெட்டி மூலமாக மாணவர்களுக்கு கற்பிக்கும் முறைகள் குறித்தும், ஆய்வு செய்து அதன் பயன்கள் பற்றி மாணவர்களிடம் கேட்டு அறிந்தார்.
தொடர்ந்து ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து பாஞ்சாலங்குறிச்சி சிலோன் காலனியில் குறுங்காடு அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார் .தொடர்ந்து பாஞ்சாலங்குறிச்சி அங்கன்வாடி மையத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதனை அடுத்து ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, பேரிடர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் 45 பயனாளிகளுக்கு ரூபாய் 24.55 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களையும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட நீர்வடி பகுதி மேம்பாட்டு முகமையின் சார்பில் ஆறு பயனாளிகளுக்கு 2 லட்சத்து 14 ஆயிரத்து 480 மானியத்தில் ஆயில் மோட்டார் களை எடுக்கும் கருவிகள் மற்றும் புல் வெட்டும் கருவிகளையும் வழங்கினார்.
தொடர்ந்து யூனியன் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஏற்கனவே மேற்கொண்ட களப்பயணங்கள் அலுவலக ஆய்வுகள் குறித்து கேட்டறிந்து அரசின் அனைத்து நல திட்டங்களும் சேவைகளும் தங்கு தடை இன்றி விரைந்து மக்களை சென்றடைவதை அனைத்து துறை அலுவலர்கள் உறுதி செய்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துறை ஆட்சியர் ஹபிபூர் ரகுமான் தாமிரபரணி வடிநிலவட்டம் மேற்பார்வை பொறியாளர் சிவக்குமார் கீழ் தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநில கோட்டம் செயற்பொறியாளர் வசந்தி கட்டடம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர் செல்வி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் சுரேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரி,வசந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஒட்டப்பிடாரம் நிருபர்.