தற்போது நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினம் யானை. ஆனால் யானை இனமானது, உண்ண உணவில்லமால், இருப்பிடம் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து அழிந்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் யானைகளின் முக்கியத்துவத்தை விளக்கவும், ஆசிய, ஆப்பிரிக்க யானைகள் அழிந்து வருவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், யானைகளின் பாதுகாப்புக்கான தீர்வுகளை முன்னெடுக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12-ம் தேதி உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
காடுகளையும், புல்வெளிகளையும் வளர்ப்பதில் யானைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. யானைகள், தாம் உண்ட பழங்களின் விதைகளை வயிற்றில் தாங்கிச் சென்று வழியெங்கும் விதைக்கின்றன. சாணம் வழியாக வெளியே வரும் பொழுது, அவை வீரியமிக்க விதைகளாக மாறி அதிக அளவில் முளைக்கின்றன. இதனால் பல காடுகள் உருவாக்கப்படுகிறது. தனக்கு மட்டுமின்றி, மற்ற விலங்குகளின் உணவு தேவையும் யானைகள் பூர்த்தி செய்து பல்லுயிர் வளத்துக்கு முக்கிய பங்காற்றுகின்றன.
மனிதர்கள் எவ்வளவு தீங்குகள் செய்தாலும், யானைகளோ எழில் கொஞ்சும் வளமான காடுகளை உருவாக்குவதில் பெரும் பங்கை வழங்கி கொண்டுதான் இருக்கின்றன. ஒரு யானை சராசரியாக 70 ஆண்டுகள் வரை உயிர்வாழும். சுமார் 7 அடி முதல் 12 அடி உயரம் வரை வளரக்கூடியது. 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையிலான எடை கொண்ட பெரிய விலங்கினமாக உள்ளது. யானையின் 2 தந்தங்களும் சுமார் 90 கிலோ எடை வரை இருக்கும். தந்தம் ஒரு முறை உடைந்துவிட்டால் மீண்டும் வளராது.
வேட்டைக்காரர்களால் டான்ஜானியா தன் யானைகளில் 80 சதவிகிதத்தை இழந்தது. கென்யா 85 சதவிகித யானைகளையும், உகாண்டா 95 சதவிகிதம் யானைகளையும் இழந்துள்ளன. ஆரம்பத்தில் கடத்தல்காரர்கள் வளர்ந்த ஆண் யானைகளையே கொன்றனர். ஏனென்றால் அவற்றிற்கே மிகப்பெரிய தந்தங்கள் இருந்தன. ஆனால் குட்டி யானைகளையும் கூட அவற்றின் சின்னஞ்சிறிய தந்தங்களுக்காக கொல்ல தொடங்கி உள்ளனர், யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என்று சொல்வதற்கு இதுதான் காரணம்.
மனிதர்களைப் போலவே யானைகள் மற்ற யானைகளை பெயர் வைத்து அழைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 1986-2020 வரை பதிவு செய்யப்பட்ட யானைகளின் 625 பிளிறல் ஒலிகளை ஆய்வு செய்தபோது குறிப்பிட்ட யானைகளை பெயர் சொல்லி அழைத்து, அதற்கு செய்திகளை கூறுவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒவ்வொரு யானைக்கும் குறிப்பிட்ட ஒலிகளை பயன்படுத்துவதோடு மட்டுமின்றி, தமக்காக எழுப்பப்படும் ஒலிகளை அடையாளம் கண்டு எதிர்வினையாற்றுவதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உலகில் மொத்தம் 24 வகை யானைகள் இருந்தது. அதில் 22 வகை இனங்கள் அழிந்து தற்போது ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா என இரண்டு வகை யானைகள் மட்டுமே மீதமுள்ளன. உலகிலேயே அதிக யானைகள் கொண்ட பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. ஆசிய யானைகளில் 60% இந்தியாவில் உள்ளது. யானைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், யானைகள் அழிந்து வருவதை தடுக்கவும் 2012 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12-ம் தேதி ‘உலக யானைகள் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.