தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் கலைஞரின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கலைஞரின் உருவப்படத்திற்கு எம்எல்ஏ சண்முகையா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் பேருந்து நிலைய வளாகத்தில் மறைந்த திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று திமுகவினரால் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் பேருந்து நிலைய வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவப்படத்திற்கு, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மாலை அணிவித்து மலர் தூவி, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அயிரவன்பட்டி கிராமத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவப் படத்திற்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்
நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி நகர செயலாளர் லிங்கராஜ், வர்த்தக அணி முத்துக்குமார் சிறுபான்மை அணி ஞானதுரை வழக்கறிஞர் அணி விஜி மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன் நெசவாளர்அணி ஈசன்சுரேஷ் மாவட்ட இளைஞரணி தங்கத்துரை பாண்டியன் முன்னாள் கவுன்சிலர் சிவன் ஆதி திராவிடர் அணி கருப்பசாமி பஞ்சாயத்து தலைவர்கள் அருண்குமார் மாரிச்செல்வம் கிளைச் செயலாளர் சற்குண பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-எஸ் நிகில்
ஓட்டபிடாரம்.