தமிழகத்திற்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள் பாரத பிரதமர் மாண்புமிகு மோடி அவர்கள் இன்று காணொளி மூலம் தொடங்கி வைத்தார். சென்னை சென்ட்ரலில் நடைபெற்ற துவக்கவிழாவில் தமிழக ஆளுநர் மாண்புமிகு R.N.ரவி அவர்கள் கொடி அசைத்து வந்தே பாரத் ரயில் சேவையைத் துவக்கி வைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சென்னை எழும்பூர் நாகர்கோவில் இடையே புதன் கிழமை தவிர மற்ற நாட்களில் 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் இரயிலும்,மதுரை பங்களூரு இடையே செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலும் இயங்கும். இன்று தொடக்கவிழா மட்டுமே. திங்கள் கிழமை முதல் வந்தே பாரத் ரயில் தனது தினசரி சேவையைத் தொடங்கவுள்ளது
சென்னை – நாகர்கோயில் ரயில் கீழ்க்கண்ட இடங்களில் நின்று செல்லும்:
தாம்பரம், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி.
மதுரை – பங்களூரு வந்தே பாரத் ரயில் கீழ்க்கண்ட இடங்களில் நின்று செல்லும்:
திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழுக்காக,
-சோலை. ஜெய்க்குமார், &
Ln.இந்திராதேவி முருகேசன்.