தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் (ஹர் கர் திரங்கா 3.0) இல்லந்தோறும் தேசியக்கொடி இயக்கம் இந்த வருடம் ஆகஸ்ட் 9 முதல் 15-ம் தேதி வரை கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு இந்தியரையும் தங்களது வீட்டில் தேசியக் கொடியை ஏற்ற ஊக்குவிப்பதன் மூலம் மக்களிடையே தேசபக்தி, நாட்டின் பெருமை உணர்வை வளர்ப்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
மக்கள் தங்கள் வீடுகளில் மூவர்ணக்கொடியை ஏற்றி, கொடியுடன் ஒரு செல்ஃபி எடுத்து harghartiranga.com என்ற தளத்தில் பதிவேற்றுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறையின் தூத்துக்குடி முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுத்தலின்படி ஒட்டப்பிடாரம் துணை அஞ்சலக ஊழியர்கள் தேசியக் கொடியுடன் ஓட்டப்பிடாரத்திலுள்ள வ.உ.சிதம்பரனார் நினைவு இல்லத்திலும், பாஞ்சாலங்குறிச்சியிலுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையிலும் இல்லந்தோறும் தேசியக்கொடி இயக்கத்தினை மக்கள் இயக்கமாக மாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தூத்துக்குடி அஞ்சலக உபகோட்ட ஆய்வாளர் மீகா நாயகம் தலைமையில் ஓட்டப்பிடாரம் துணை அஞ்சலக அதிகாரி ரூபன் மற்றும் அஞ்சலக ஊழியர்கள் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-எஸ் நிகில், ஓட்டபிடாரம்.