ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குச்சாலையில் காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கடைக்காரர்களுக்கு அபராதம் ; சுகாதாரத்துறையினர் அதிரடி நடவடிக்கை.
ஓட்டபிடாரம் குறுக்குசாலை பகுதியில் உள்ள டீக்கடை பலசரக்கு ஓட்டல் பேக்கரி உள்ளிட்ட கடைகளில் இன்று சுகாதார ஆய்வாளர்கள் தேவசுந்தரம் காளிமுத்து அருணாச்சலம் மானக்க்ஷா கங்காதர் பாபு ஆகியோர் கொண்ட சுகாதாரத்துறை குழுவினர் கடைகளில் புகையிலை பொருட்கள் ஏதும் விற்கப்படுகிறதா? என்பது குறித்து அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது காலாவதியான உணவு பொருள்கள் மற்றும் கேரி பேக்குகள் மற்றும் பொது இடங்களில் புகைபிடித்த நபர்கள் உட்பட 9 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா 100 வீதம் அபராதம் விதித்து தொடர்ந்து காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-எஸ் நிகில், ஓட்டபிடாரம்.