தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
நேற்று இரவு முக்கிய நிகழ்ச்சியாக ஈரோடு மங்கை வள்ளி குழுவினரின் கும்மியாட்டம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு கும்மி பாட்டு பாடி நடனமாடி அசத்தினர். இந்நிகழ்ச்சியில் புதியம்புத்தூரை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-எஸ் நிகில், ஓட்டபிடாரம்.