தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் வட்டாட்சியர் நிலையில் நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல்களும், நியமனங்களும் செய்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதன் விவரம் வருமாறு: திருச்செந்தூர் இஸ்ரோ நில எடுப்பு தனி வட்டாட்சியர் சங்கர நாராயணன் பணி மாறுதல் செய்யப்பட்டு எட்டயபுரம் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எட்டயபுரம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் பணி மாறுதல் செய்யப்பட்டு விளாத்திகுளம் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் பணி மாறுதல் செய்யப்பட்டு கோயில்பட்டி தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவில்பட்டி வட்டாட்சியர் முரளிதரன் பணி மாறுதல் செய்யப்பட்டு தூத்துக்குடி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்
தூத்துக்குடி வட்டாட்சியர் பிரபாகரன் பணி மாறுதல் செய்யப்பட்டு திருச்செந்தூர் இஸ்ரோ நில எடுப்பு (அலகு 6) தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் சுரேஷ் பணி மாறுதல் செய்யப்பட்டு தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் தனி வட்டாட்சியர் சுந்தர ராகவன் பணி மாறுதல் செய்யப்பட்டு கயத்தார் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கயத்தார் வட்டாட்சியர் நாகராஜன் பணி மாறுதல் செய்யப்பட்டு தூத்துக்குடி – மதுரை வழி அருப்புக்கோட்டை அகலப்பாதை ரயில் திட்டம் (விளாத்திகுளம்) தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இம்மாறுதல்கள் குறித்து எவ்வித மேல்முறையீடும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும், உடனடியாக மாற்றப்பட்டுள்ள புதிய பணியிடத்தில் பொறுப்பேற்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளா.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.