தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மணியாச்சியில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிறுத்த கட்டிட பணிகளை எம்எல்ஏ சண்முகையா ஆய்வு செய்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மணியாச்சியில் புதிய பேருந்து நிறுத்த கட்டிடம் கட்டும் பணிகளுக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் இன்று காலையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா இன்று காலையில் மணியாச்சியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிறுத்த கட்டிடப் பணிகளை நேரில் சென்று திடீர் ஆய்வு செய்தார்.
மேலும் புதிய பேருந்து நிறுத்த கட்டிடப் பணிகள் தரமாக கட்டப்படுகிறதா என்பது குறித்தும் மேற்கொண்டு, ஒப்பந்ததாரிடம் கட்டிட பணிகளை தரமாகவும் விரைந்து முடித்திடவும் வலியுறுத்தினார் . நிகழ்ச்சியில் மணியாச்சி பஞ்சாயத்து தலைவர் பிரேமா முருகன் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்கள் தொண்டர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-எஸ் நிகில் ஓட்டபிடாரம்.