கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் மருத்துவமனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 9-ம் தேதி இரவு நோயாளி ஒருவரை பார்க்க சஞ்சய் ராய் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
பின்னர் அவர் மருத்துவர் ஓய்வு எடுக்கும் செமினார் ஹாலுக்கு சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அவர் கத்தி கூச்சலிட்டதும் கழுத்தை நெறித்துக் கொன்று விட்டு அங்கிருந்து தப்பி இருக்கிறார்.
கொல்கத்தா மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது மருத்துவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஓமாந்தூரார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் பேரணியாக சென்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.