தூத்துக்குடி மாவட்டம் பேரிலோன்பட்டி இந்து நாடார் தொடக்கப்பள்ளியில் A.N.S.கோவிந்தசாமி, A.N.R.தங்ககனி, A.N.G.ரவீந்திரன் அவர்களின் குடும்பத்தினர் சார்பாக ரூ.30-லட்சம் மதிப்பீட்டில் நூற்றாண்டு விழா மூன்று வகுப்பறை கட்டிடத்தினை பள்ளி கல்வி குழு உறுப்பினர் செல்வகுமார் முன்னிலையில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் திறந்து வைத்தார்.
மேலும் தி.வெ.நல்லழகு நாடார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்பு,11-ம் வகுப்பு,12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ – மாணவிகளுக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் வழக்கறிஞர். ரெபேக்கா அனிட்டா மார்கண்டேயன் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்நிகழ்வில் தி.வெ.அ நல்லழகு நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.ரஜூலா, இந்து நாடார் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) கிரேஸ்ஷீபா ஜெயராணி, உறவின்முறை பெரியோர்கள் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு,
புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஒன்றிய குழு உறுப்பினர் முனியசாமி, பேரிலோவன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பெத்தனாட்சி, ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன், N.வேடப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் த ஆவுடையப்பன், கிளைச் செயலாளர்கள் வீரபாண்டி, பிச்சையா விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஆசிரியர்கள் – ஆசிரியைகள்,மாணவ – மாணவிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.