பீகாரில் விளையாட்டு பொம்மை என நினைத்து ஒரு வயதுக் குழந்தை பாம்பைக் கடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பீகார் மாநிலம் கயாவில் உள்ள ஜாமுகர் [Jamuhar] கிராமத்தில் கடந்த வாரம் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த ஆண் குழந்தை அங்கு வந்த பாம்பை விளையாட்டுப் பொருள் என்று கருதி கையில் எடுத்து வாயில் வைத்து கடித்துள்ளது.
குழந்தை தனது வாயில் பாம்பை வைத்து மென்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்த தாய், குழந்தையிடம் இருந்து பாம்பைப் பிடுங்கி வீசிவிட்டு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
குழந்தை கடித்ததில் உடலின் ஒரு பகுதி நைந்த நிலையில் அந்த பாம்பு உயிரிழந்துள்ளது. பாம்புக்கு விஷத்தன்மை இல்லாததால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படவில்லை. அப்பகுதியில் மழைக்காலத்தில் அவ்வகை பாம்புகள் அதிகம் காணப்படுவது வழக்கமாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.