கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தேயிலை தோட்டங்களிலும் ஏல தோட்டங்களிலும் காப்பி தோட்டங்களிலும் மற்றும் ரப்பர் தோட்டங்களிலும் வேலை பார்த்து வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வயநாடு நிலச்சரிவு சம்பவத்திற்காக கேரளா முழுவதும் பல்வேறு உதவி நிறுவனங்கள், அமைப்பு சார்ந்த நிறுவனங்கள், சமூக ஆர்வல நிறுவனங்கள், சமூக ஆர்வல உதவிக் குழுக்கள் மாற்றும் பல உதவி செய்யும் அமைப்புகள் அனைத்தும் இணைந்து பண உதவிகளையும் பொருள் உதவிகளையும் செய்கின்றனர். மட்டுமல்லாது பல மாநிலங்களில் இருந்தும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்பொழுது இடுக்கி மாவட்டத்தின் சுற்றுப்பகுதிகளில் தொழிலாளர்கள் அனைவரும் ஒருநாள் தங்களுடைய சம்பளத்தை வயநாடு நிலச்சரிவு இழப்பீட்டிற்கு கொடுக்க வேண்டும் என அனைத்து கட்சிகளின் தலைவர்களும் சேர்ந்து அனைத்து கட்சிகளின் சார்பில் முடிவு எடுத்துள்ளனர்.
இதனை நேரடியாக கேரள முதல்வரிடம் சென்று கொடுக்கப்படும் நிவாரணங்களுக்கான அனைத்து வழி வகையிலும் இதன் மூலம் செய்யப்படும் என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கபட்டது காங்கிரஸ் கட்சி தலைவர் மணி மற்றும் ஏ ஐ டி யு சி தலைவர் எம் ஒய் அவுசப் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் ஏ ராஜா அவர்களும் மற்றும் பல மூத்த தலைவர்களும் இதில் இந்த கூட்டத்தில் பங்கேற்று முடிவெடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணாறு.