விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் தேசியக் கொடியேற்றி 78-வது சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இன்று நாடு முழுவதும் இந்தியாவின் 78-வது சுதந்திர தினவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், 78-வது சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றினார். இதனைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள் உட்பட அனைவரும் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
பின்னர் யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் அங்கிருந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி சுதந்திர தினவிழாவை அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.