தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சந்திரகிரி விளக்கு பகுதியில் கேஸ் ஏற்றி சென்ற லாரியின் டேங்கர் மட்டும் தனியாக கழன்று நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கேரள மாநிலம் கொச்சியிலிருந்து தூத்துக்குடியில் உள்ள பாரத் கேஸ் பிளான்ட் க்கு கேஸ் நிரப்பி கொண்டு டேங்கர் லாரி ஒன்று இன்று காலையில் ஓட்டப்பிடாரம் அருகே சந்திரிகிரி விளக்கு பகுதியில், மதுரை டூ தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. லாரியை மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார் அப்போது லாரியானது அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டர் லாரியின் முன்பக்கம் தனியாக கழன்று சென்று நான்கு வழிச்சாலையின் மறுபக்கம் போய் நின்றது. மேலும் லாரியின் பின்பகுதியில் இருந்த கேஸ் நிரப்பப்பட்ட டேங்கரானது தனியாக கழன்று சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக கேஸ் லீக்கேஜ் ஆகாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் அதிர்ஷ்டவசமாக டிரைவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் மதுரை டூ தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டப்பிடாரம் போலீசார் போக்குவரத்தை மாற்று சாலையின் வழியாக போக்குவரத்தை மாற்றி சரி செய்து,மேலும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-எஸ் நிகில் ஓட்டபிடாரம்.