சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல… பெரும்பான்மை மக்களுக்கும்…. எதிரானது பாஜக.! சிறுபான்மை துறை தலைவர் பரபரப்பு அறிக்கை…!

கண்டன அறிக்கை:-

தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறையின் சார்பாக கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.
சிறுபான்மை மக்களுக்கும் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரணாக நின்று குரல் கொடுக்கும் தலைவர் செல்வ பெருந்தகை மீது வேண்டுமென்றே திட்டமிட்டு பாசிச பாஜக மற்றும் அதனுடைய கள்ளக் கூட்டணியில் தொடர்புள்ள கூட்டங்கள் சட்டரீதியாக சந்திக்க துப்பு இல்லாத நபர்கள் ஒன்று சேர்ந்து அரங்கேற்றப்படும் நாடகமோ என்று எனக்கு தோன்றுகிறது.
தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள் பதவி ஏற்ற நாளிலிருந்து மிக எழுச்சியாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் மிக எழுச்சியுடன் வளர்ந்து வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத சங்கி கூட்டங்களும் அதன் தொடர்பில் உள்ள கூட்டங்களால் நடத்தப்படும் இதுபோன்ற அவதூறு கருத்துக்களை சட்ட ரீதியாகவும் மக்கள் மன்றத்தில் கொண்டு சென்று இவர்களின் எண்ணங்களை முறியடிப்போம்.

தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள் எதற்கும் அஞ்சாமல் அமலாக்கத் துறையை கண்டித்து மாபெரும் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார் இது சங்கி கூட்டங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை,ஏன் இவர்கள் தலைவர் செல்வப் பெருந்தகை மீது வண்ணம் கொண்டு மறைமுகமான தாக்குதல் நடத்துகிறார்கள்.?

அமலாக்கத்துறை பாஜகவின் கை பாவையாக செயல்படுவது அனைவருக்கும் அறிந்ததே அதை கண்டித்து மிகப்பெரிய ஒரு ஆர்ப்பாட்டம் நடத்திக் காட்டினார். சிறுபான்மை மக்களுக்கும் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை தருகிறார், அவர்களின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டு நடக்கிறார், இதை சங்கி கூட்டங்களும் சங்கிகளுக்கு ஆதரவான கூட்டங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பாசிச பாஜக சிறுபான்மை மக்களுக்கும் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கட்சி என்பது மீண்டும் ஒரு முறை தன்னுடைய செயல்பாடுகளால் தெளிவுபடுத்தி உள்ளது.

பாஜக சிறுபான்மை மக்களுக்கும் தலித் மக்களுக்கு மட்டும் எதிரான கட்சி அல்ல…. பெரும்பான்மை மக்களுக்கும் எதிரான கட்சி என்பதை மக்கள் மன்றத்தில் தோலுரித்து காட்டியுள்ளார் நமது தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள். கோவையில் பாஜகவால் நடத்தப்பட்ட பெரும்பான்மை மக்களின் மீது ஜிஎஸ்டி எனும் ஆயுதத்தை வைத்து பெரும்பான்மை சமுதாயத்தை சார்ந்த தொழிலதிபரும் அன்னபூர்ணா குழுமத்தின் தலைவருமான திரு சீனிவாசன் அவர்களை கொஞ்சம் கூட நாவு கூசாமல் நாட்டின் மீது அக்கறை இல்லாமல் அடிமைத்தன திமிரோடு அவரை மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அன்னபூர்ணா உரிமையாளரின் மீது தொடுக்கப்பட்ட அவமரியாதை தாக்குதலை கண்டித்து சம்பவம் நடந்து சில மணித்துளிகளிலே தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள் கோவையில் மிகப்பெரிய ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்திக் காட்டி பாஜக எனும் பாசிச கட்சி சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல பெரும்பான்மை மக்களுக்கும் எதிரான கட்சி என்பதை மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டிய தலைவர் செல்வப் பெருந்தகை மீது ஏதாவது ஒரு அவதூறை சுமத்த வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு இதுபோன்ற செயல்களில் பாசிச சக்திகள் செயல்படுவது அப்பட்டமாக தெரிகிறது.

தலைவர் செல்வ பெருந்தகை மீது ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு கொண்டு பேசி வரும் யோக்கியர்கள் ஏன் சட்ட ரீதியாக சந்திக்க முன் வருவதில்லை தலைவர் செல்வப் பெருந்தகை மீது குற்றம் இருந்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அதை எடுக்க துப்பு இல்லாத கோழைகள் தலைவர் செல்வப் பெருந்தகையை எப்படியாவது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற சிந்தனையோடு செயல்பட்டு வரும் கூட்டங்களின் பகல் கனவு ஒரு நாளும் பலிக்காது.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி என்பது பல சோதனைகளை தாண்டி காலணி ஆதிக்கத்திலிருந்து நம்முடைய நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சி ஆகையால் விமர்சனங்கள் அச்சுறுத்தல் மிரட்டல்கள் போன்றவற்றையெல்லாம் பார்த்து சகித்துக் கொண்டவன் தான் காங்கிரஸ்காரன் என்பதை பாசிச கூட்டங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு கூட்டம் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் நடத்தும் பொழுது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைவர் செல்வப் பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக நம்முடைய இளம் தலைவருக்கு கடிதம் எழுதும் அறிவுஜீவிகள் அந்த கடிதத்தை காவல்துறையிடமோ நீதிமன்றத்தின் வாயிலாகவோ கொண்டு சென்றிருக்கலாம் ஆனால் அதை விட்டுவிட்டு பொதுக்குழு கூட்டம் நடக்கும் பொழுது இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது அப்பட்டமாக தெரிகிறது தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் இருப்பது சில கூட்டங்களுக்கு பிடிப்பதில்லை அதுவும் தலித் சமுதாயத்தை சார்ந்த ஒருவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் இருப்பது ஜீரணிக்க முடிவதில்லை அதனால்தான் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற தோனியில் இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார்கள்.
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள் இதுபோன்ற எத்தனையோ பிரச்சனைகளை கண்டு அதை எல்லாம் எதிர்கொண்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார் ஆகையால் போராடுவதும் எதிர்நீச்சல் போடுவதும் நமது தலைவருக்கு புதிதல்ல இந்த அவதூறுகளையும் முறியடித்து தலைவர் செல்வப் பெருந்தொகையின் வெற்றிப் பயணம் தொடரும் தொடர்ந்து கொண்டே இருக்கும் எந்த சூழ்நிலையிலும் தலைவர் செல்வப் பெருந்தகைக்கு சிறுபான்மை மக்களின் ஆதரவு மற்றும் ஆசிர்வாதம் என்றென்றும் இருக்கும் என்பதை இதன் மூலம் கூறிக் கொள்கிறேன்.
-MMH.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp