தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஓசநூத்து கிராமத்தில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 67 வது நினைவு நாள் விழா; யூனியன் சேர்மன் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சுதந்திரப் போராட்டத்திற்காக பாடுபட்ட முக்கிய தலைவர்களில் ஒருவரான தியாகி இமானுவேல் சேகரனாரின் 67 வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஓசநூத்து கிராமத்தில் உள்ள தியாகி இமானுவேல் சேகரனாரின் உருவ சிலைக்கு ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன், ஒன்றிய கவுன்சிலர் மொட்டையசாமி, கொடியங்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார், சங்கம்பட்டி பஞ்சாயத்து தலைவர் கணேசன், ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர் கோபால், ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன், கிளைச் செயலாளர் சண்முகம், கிளை பிரதிநிதி சமுத்திரவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர் .
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-எஸ் நிகில் ஓட்டபிடாரம்.