தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விளாத்திகுளத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா விளாத்திகுளம்,செப்.28: விளாத்திகுளம் அரசு கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது. விளாத்திகுளம் சுப்பிரமணியசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறையின் சார்பில் போஷன் அபியான் திட்டத்தின் மூலம் மகளிர் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்படுகிறது.
விளாத்திகுளத்தில் சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவில் இரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள், தானிய வகைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகள் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கோலப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் கல்லூரி முதல்வர் குமாரி, தூத்துக்குடி ஹோலி கிராஸ் கல்லூரி பேராசிரியர் கரோலின், பேரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையமருத்துவர் எழிலரசி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் ஐ.சி.டி.எஸ் மேற்பார்வையாளர்கள்,வட்டார ஒருங்கிணைப்பாளர்,அங்கன்வாடி பணியாளர்கள், கல்லூரியின் அனைத்துத் துறை பேராசிரியர்கள் உட்பட கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந. பூங்கோதை.