கோவை மாவட்டத்தில் தற்போது யானைகளின் நடமாட்டம் தொடர்ந்த அதிகரித்து வருகின்றது, நரசிபுரம் மற்றும் தொண்டாமுத்தூர், மதுக்கரை போன்ற பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு யானைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது தொடர்கதையாகி வருகின்றது, இது குறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கான பணிகளை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் தாய் மற்றும் மகனை யானை தாக்கிய நிலையில் இருவரும் படுகாயம் அடைந்தனர், இது குறித்து போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் கூடலூர் அருகே உள்ள பொக்காப்புரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தெய்வத்தாள் மற்றும் அவருடைய மகன் கோகுல் குமாரை யானை தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கோவை நீலகிரி பகுதியில் தொடர்ந்து யானைகள் மனிதர்களை தாக்கும் சம்பவம் அதிகரித்து வருகின்றது, இதனால் வனத்துறையினர் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வராத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி கோவை தடாகம் பகுதியில் ஒற்றைக் காட்டு யானை வாழைத்தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது, யானைகள் விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்வதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
அண்மை காலமாக குடியிருப்பு பகுதிகளில் யானை நடமாட்டம் அதிகமாக காணப்படுவதினால் இரவு நேரங்களில் யாரும் தேவையில்லாமல் வர வேண்டாம் என வனத்துறையினர் சார்பாக தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.