கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுக்கா பகுதியில் உள்ள சிங்கோனா பகுதியில் சின்ன கல்லாறு, நீராறு, பெரிய கல்லார், சிங்கனா, சிங்கோனா 5வது டாப், சிங்கர்னா பத்தாம் பாத்தி மற்றும் அப்பகுதியில் தேயிலை ஆராய்ச்சி கழகம் உள்ளது, அப்பகுதியில் 3000 க்கு மேலான மக்கள் வசித்து வருகின்றனர்.
அங்கு தொலைபேசி நிலையம் இல்லாமல் தவிக்கின்றனர். பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு ஏதேனும் ஒரு சில நாட்கள் மட்டும்தான் உபயோகத்தில் உள்ளது என அப்பகுதி மக்கள் புகார்கள் தெரிவித்து வருகின்றனர். பின்பு மழைக்காலங்களில் கரண்ட் இல்லாமல் போனால் அப்பகுதியில் மிகுந்த அவதிக்குள்ளாகும் அவல நிலை உள்ளது.
அதிகாரிகளிடம் கூறியும் எந்தவித நடவடிக்கை எடுப்பதில்லை, மேலும் இது பல ஆண்டுகாலாக இந்த நிலைமையில் தான் உள்ளது, அவசரத்திற்கு அழைப்பதக்ற்கு கூட தவிக்கும் பொதுமக்கள். புகார்கள் தெரிவித்து வருகின்றனர் இதை கண்டு நடவடிக்கை எடுப்பார்களா என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.