கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுக்கா பகுதியில் இந்தியன் வங்கி, காவல் நிலையம் பின்புறம் செல்லும் வழியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்ட குடிநீர் தொட்டி, புதிய பேருந்து நிலையம், தபால் நிலையம் அருகாமையில், பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை பின்புறம் இது போன்ற பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்ட குடிநீர் தொட்டி இருந்தும் இதனால் இப்பகுதியில் வரும் பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் தண்ணீர் இன்றி கடைகளில் தண்ணீரில் கிடைக்காமல் அவர்கள் விலைக்கு வாங்கக்கூடிய அவல நிலை உள்ளது. இது போன்ற பகுதிகளில் குடிநீர் தொட்டிகளை பராமரிக்க வேண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என இவ்வழி வரும் பொதுமக்கள் கூறுகிறார்கள்.
-திவ்யக்குமார், வால்பாறை.