கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கரட்டுமேடு பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்ற கூலித் தொழிலாளி, இரவு மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் உள்ள திரையரங்கில் திரைப்படம் பார்த்து விட்டு நள்ளிரவில் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்தச் சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவர், தான் ஒரு பயிற்சி காவலர் என்று கூறி வாகனச் சோதனை என்ற பெயரில் ஆவணங்களைக் கேட்டுள்ளார். மேலும், பெரியசாமியிடம் ரூ. 500 பணம் வேண்டும், இல்லையென்றால் வழக்குப் பதிவு செய்வேன் என்று மிரட்டி லஞ்சம் வாங்கியுள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தொடர்ந்து சாலையில் சென்ற போது மற்றொரு பகுதியில் உண்மையான காவல்துறையினர் நிற்பதைப் பெரியசாமி பார்த்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெரியசாமி, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, அது குறித்து காவல்துறையினரிடம் தெரிவித்தார். பின்னர், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார்.
விசாரணையில், குற்றவாளி காரமடை பெரிய தொட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமியின் மகன் பிரகாஷ் (40) என்பது தெரிய வந்தது. பஞ்சர் கடை நடத்தும் அவர், போலி காவலராக நடித்து வந்தது அம்பலமானது. பிரகாஷை கைது செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.