மூணாறில் கடந்த இரண்டு மாத காலமாக செண்டுவாரை, குண்டலை, புதுக்கடி, அருவிகாடு, ஸான்டோஸ்,தீர்த்தமலை, சிட்டிவாரை போன்ற எஸ்டேட் பகுதிகளில் வலம் வந்து ஏராளமான விவசாயங்களையும் யானைகள் சேதப்படுத்தியது. தற்பொழுது படையப்பா யானை வேறொரு பகுதிக்கு சென்றதன் பிறகு 3 யானைகள் சேர்ந்த குழு இந்த எஸ்டேட் பகுதிகளுக்கு வந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஸான்டோஸ் மற்றும் புதுக்கடியில் நிலை உறுதிப்படுத்தி இருந்த மூன்று யானைகள் நேற்றைய தினம் குண்டலை கிளப் பகுதியை வந்தடைந்தது. குண்டளை கிளப் பகுதியில் வசிக்கும் ஸ்டீபன்-சுமதி இவர்களின் வீட்டின் அருகில் நிறுத்தி வைத்திருந்த காரின் பின்புறம் யானை தாக்கியது. சத்தம் கேட்டு ஓடி வந்து வெளியே பார்த்த பொழுது மூன்று யானைகள் சேர்ந்த குழு வாகனத்தை சேதப்படுத்துவதை கண்ட நபர்கள் சத்தம் போட்டதை தொடர்ந்து யானைகள் சிட்டிவாரை பகுதியை நோக்கி நடந்து சென்றது.
தற்பொழுது 3 யானைகள் சேர்ந்த குழு சிட்டிவாரை எஸ்டேட் பீல்டு நம்பர் 32 நிலை உறுதிப்படுத்தி உள்ளது. சேதமடைந்த வாகனத்திற்கு வனத்துறையினரிலிருந்து ஏதாவது நஷ்ட ஈடு கிடைக்குமா என குடும்பத்தினர் கோரிக்கை வைக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-மணிகண்டன் கா
மூணாறு,கேரளா