அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசினார்!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில், அதிமுக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் எதிர்கட்சித் துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், “இன்று நானும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் திருச்செந்தூரிலிருந்து வந்து கொண்டிருந்த போது தங்களது காருக்கு முன்னால் சென்ற காரை ஓட்ட தெரியாமல் தாறுமாறாக ஒரு நபர் ஒட்டி சென்றதாகவும் சிறிது தூரத்தில் நான்கு வழிச்சாலையில் அந்த காருக்கு முன்னால் வழிமறித்து ஒரு இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அந்தக் காரை ஓட்டி வந்து நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதால்… நானும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் அங்கு சென்று கேட்டதற்கு… இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் தங்களை இந்த கார் மோதும்படி வந்ததாக கூறியுள்ளனர்.

இதையடுத்து அந்த பைக்கில் வந்த நபர்களையும், இந்த கார் ஓட்டியவரையும் இது போன்று நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் என்று கூறி சமாதானம் செய்து சரியாக காரை ஓட்டி நல்லபடியாக ஊர்போய் சேருங்கள் என அனுப்பிவைத்தோம். இந்த நபர் கிறிஸ்டியன், பாதிரியார் என்பதெல்லாம் ஒன்றும் எங்களுக்கு தெரியாது, ஒரு சம்பவம் நடக்கிறது அதை வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு நாங்கள் போனால் என்ன மனிதாபிமானம் இருக்கும், ஒரு பொறுப்புள்ளவங்க, அதிலும் நாங்கள் அமைச்சராக இருந்திருக்கிறோம், தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறோம். வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை பேசி அனுப்பி வைத்தோம், இதை செய்ததில் என்ன தப்பு இருக்கிறது? என்று விளக்கம் அளித்துப் பேசினார்.

அதுமட்டுமின்றி, இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட அமைச்சரான தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவனின் பேட்டிக்கு பதிலாக உங்களுக்கு அரசியல் செய்வதற்கு வேறு பிரச்சினை இல்லையா மதத்தையும், சாதியையும் வைத்தா அரசியல் பன்றது? என்ன நடந்தது என்று விசாரிக்கமலேயே இதுபோன்று பேசுவதா?” என்று ஆவேசமடைந்தார்.

அதிமுக துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் பேசுகையில் 2026 ல் ஆட்சி அமைக்கப் போவது அதிமுக தான் சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் ஏதாவது உண்மை பேசுகிறார்களா சொல்வதெல்லாம் பொய் என்று கூறினார்.

அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர்
இதில் அதிமுக வரவேற்புரை சுரேஷ்குமார் தகவல் தொழில்நுட்பம்
விளாத்திகுளம் அதிமுக ஒன்றிய பெருந்தலைவர் முனியசித்தி ராமச்சந்திரன், புதூர் ஒன்றிய பெருந்தலைவர் தனஞ்செயன், ஒன்றிய செயலாளர்கள் மகேஷ் பால்ராஜ், காந்தி காமாட்சி, தனபதி, விளாத்திகுளம் நகரச் செயலாளர் மாரிமுத்து, அதிமுக நிர்வாகிகள் வரதராஜ பெருமாள், வேல்முருகன், கவுன்சிலர்கள் பெருமாள் சாமி, பிரியா, மகளிர் அணி சாந்தி, தகவல் தொழில் நுட்ப அணி ஆனந்த்,நிர்மல்,தங்கராஜ், குமாரத்தாய் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp