தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பெரியசாமிபுரத்தில் உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மதுரையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்பு அக்டோபர் 15ஆம் தேதி இவர்கள் மதுரையில் இருந்து கோயில் திருவிழாவிற்காக இவர்களது சொந்த ஊர்ரான பெரியசாமிபுரம் கிராமத்திற்கு வந்துள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
திருவிழா முடிந்த நிலையில் அதிகாலை அக்குடும்பத்தினர் அனைவரும் அங்குள்ள பெரியசாமிபுரம் கடலுக்கு குளிக்க சென்றுள்ளனர். இவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது இலக்கியா வயது ( 21) கன்னியம்மாள் வயது (50),அனிதா வயது (29), நிவேதா வயது (22),முருக லட்சுமி வயது (39) இந்த ஐந்து பெண்களும் கடலில் குளித்துக் கொண்டிருந்த பொழுது அலையில் சிக்கி நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். இதனை கண்ட அவர்களது உறவினர்கள் கடல் அலைகள் சிக்கியவர்களை மீட்டு உடனடியாக வேம்பார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர் கல்லூரி மாணவி இலக்கியா மற்றும் கண்ணியம்மாள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
நீரில் மூழ்கிய மற்ற மூன்று பேரை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் தற்போது அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்த வேம்பார் கடலோர காவல் படை போலீசார் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த கல்லூரி மாணவி இலக்கியா மற்றும் கண்ணியமாளாகிய இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயில் திருவிழாவிற்கு வந்து கடலில் மூழ்கிய இரு பெண்கள் உயிரிழந்த நிலையில் அந்த கிராமத்தில் மிகவும் பரபரப்பைம் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.