காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் அருகே எப்போதும்வென்றான் சோலைசுவாமி கோவில் மண்டபத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்றது. அப்போது வரவு செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது தொடர்ந்து எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்புரை ஆற்றுகையில்,
கிராம சபை கூட்டம் நடத்தப்படுவதற்கு காரணம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் கிராமங்களுக்கே வந்து அங்கு இருக்கக்கூடிய மக்களை சந்தித்து அவருடைய பிரச்சினைகள், கோரிக்கைகளை கேட்டறிந்து நேரடியாக தீர்வு காண வேண்டும் என கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முதல்வரே வருவது போல அரசு அதிகாரிகள் அத்தனை பேரும் மக்களை நேரில் சந்தித்து அவருடைய மனுக்களை பெற்று அங்கேயே தீர்வு காணக்கூடிய அரசு நம்மளுடைய முதலமைச்சரின் அரசு. இங்குள்ள விவசாய ஒருவர் அளித்துள்ள கோரிக்கை மனுவில் குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி தர வேண்டும் என கேட்டு இருக்கிறார்.
தமிழகம் முழுவதும் விவசாயிகளின் நலம் கருதி வண்டல் மண் எடுப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டு வண்டல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத்தொகை மற்றும் 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் வருகிறது. 100 நாள் வேலை திட்டத்திற்காக ஒன்றிய அரசாங்கம் தான் நிதி தரவேண்டும் .ஆனால் அங்கிருந்து நிதி ஏதும் வரவில்லை நிதி வந்தவுடன் 100 நாள் வேலை திட்டம் வழங்கப்படும்.
மகளிர் உரிமை தொகை தகுதி இருந்தும் கிடைக்காத விடுபட்ட நபர்களுக்கு விரைவில் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை வழங்க முதலமைச்சர் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார் எனவே அதுவும் விரைவில் வழங்கப்படும் என தெரிவித்தார் .
எப்போதும்வென்றான் கிராமத்தைச் சேர்ந்த முத்து திவ்யா(13) என்ற சிறுமிக்கு பெற்றோர்கள் இறந்து விட்டதால் தாத்தா வீட்டில் இருந்து எப்போதும்வென்றானில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் சிறுமி தனது படிப்பிற்கு தேவையான செதிகளை செய்து தருமாறு கனிமொழி இடம் கோரிக்கை மனுவை அளித்தார். தொடர்ந்து கனிமொழி எம்பி படிப்பதற்கு தேவையான அத்தனை உதவிகளும் செய்து தரப்படும் என சிறுமியிடம் உறுதியளித்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்ச்சியில் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி, ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், துணை சேர்மன் காசி விசுவநாதன், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் ஆனந்த், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தா, கிரி, வட்டார மருத்துவ அலுவலர் அன்பு மாலதி, ஓட்டப்பிடாரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சிவகாமி எப்போதும் வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-எஸ் நிகில், ஓட்டபிடாரம்.