தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் மகாலிங்கம்(30). கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்துமாரி. குடும்பபிரச்னை காரணமாக முத்துமாரி, தனது 2 ஆண் குழந்தைகளுடன் கீழவிளாத்திகுளம் கிராமத்தில் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். மகாலிங்கம் வெளியூரில் வேலை செய்து வந்த நாட்களில் அவ்வப்போது தனது மனைவியையும் குழந்தையையும் கீழ விளாத்திகுளத்திற்கு வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தற்போது சில மாதங்களாக மகாலிங்கமும் கீழவளாத்திகுளத்திலேயே தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு கணவன் மனைவியிடையே பிரச்சனையை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மகாலிங்கம் இன்று காலை எட்டு மணி அளவில் விளாத்திகுளம் வேம்பாசாலையில் உள்ள தனியார் தொலைபேசி டவரில் உச்சியில் ஏறி நின்று கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த விளாத்திகுளம் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் மகாலிங்கத்திடம் சமாதானமாக பேசி கீழே இறங்கச் செய்ய முயற்சி செய்தனர். இருப்பினும் மகாலிங்கம் கீழே இறங்க மறுத்துவிட்டார் கீழே இறங்கினால் தனது குடும்ப பிரச்சனையை தீர்த்து வைப்பீர்களா என்று போலீசாரிடம் கேட்டார். காவல்துறையினரும் கீழே வந்தவுடன் குடும்ப பிரச்சனையை சுமுகமாக பேசி தீர்த்து வைப்பதாக கூறினார்.
இருப்பினும் மகாலிங்கம் கீழே இறங்கி வராமல் இரண்டரை மணி நேரமாக டவரின் உச்சியிலேயே நின்றபடியும் தொங்கியும் கொண்டிருந்தார். இதன் பின்னர் மகாலிங்கத்தின் மனைவி மற்றும் குழந்தைகளை சம்பவ இடத்திற்கு வரவைத்து அவர்களை மகாலிங்கத்திடம் சமூகமாக பேசி கீழே வர சொன்னார்கள்.
யார் சொல்லியும் கேட்காத மகாலிங்கம் இரண்டரை மணி நேரத்திற்கு பின்பு தனது பிரச்சனைகளை தீர்த்து வைத்தால் கீழே இறங்குவதாக கூறி சுமார் 11 மணி அளவில் கீழே இறங்கினார்.
கீழே இறங்கிய மகாலிங்கத்தை தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்று ஆலோசனை வழங்கி அனுப்பி வைத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை