கோவை மாவட்டத்தில் ஏராளமான வாகனங்கள் இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ரெட் கிராஸ் ஜங்ஷன் அருகே போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டு வந்தது. இந்த ரெட் கிராஸ் ஜங்ஷனானது பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு மற்றும் தலைமை அலுவலகம் சாலை, அரசு கலைக்கல்லூரி சாலை ஆகியவை இணைக்கும்.
இந்நிலையில் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் போலீசார் சார்பில் பேரி கேடுகளை பயன்படுத்தி தற்காலிகமாக ரவுண்டானா போல் அமைத்துள்ளனர். இதன் மூலம் பழைய தபால் நிலைய சாலை, எஸ்பிஐ ரோடு, நீதிமன்ற வளாகம் செல்பவர்கள் வலது புறம் திரும்பி செல்ல வேண்டும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ரேஸ் கோர்ஸ் மற்றும் அரசு கலைக்கல்லூரி சாலையில் இருந்து வருபவர்கள் காந்திபுரம் செல்ல ரவுண்டானாவில் வலது புறம் திரும்பி செல்ல வேண்டும். இது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்கப்படும். மேலும் இதனை கண்காணித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பு இருந்து வருகிறது. முன்பெல்லாம் இந்த பகுதியில் ஏராளமான வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து சென்ற வண்ணம் இருக்கும். இந்நிலையில் இந்த தற்காலிக ரவுண்டானாவை பயன்படுத்தி மக்கள் அனைவரும் விரைந்து செல்ல முடிவதாக அவர்கள் கூறினர். ஏற்கனவே அந்த பகுதிகளில் நீதிமன்றத்திற்கு முன்பு ரவுண்டானா கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவதால் தற்காலிகமாக போலீசார் சார்பில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி. ராஜேந்திரன்.