மாமன்னர் ஒண்டிவீரன் நினைவு மற்றும் வீரமங்கை குயிலி நினைவு நாளை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயத்தை அதிமுக ஒன்றிய பெருந்தலைவர் முனி சக்தி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாமன்னர் ஒண்டிவீரனின் 253வது நினைவு விழா மற்றும் வீரமங்கை குயிலியின் 244வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அருந்ததியினர் சமுதாயம் நடத்தும் முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டிகள் எல்கை பந்தயம் நடைபெற்றது. பூஞ்சிட்டு, தேன்சிட்டு, தட்டான் சிட்டு என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 104 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.
பூஞ்சிட்டு போட்டிக்கு 8 கிலோமீட்டர் தூரமும், தேன்சிட்டு போட்டிக்கு 6 கிலோ மீட்டர் தூரமும், தட்டான் சிட்டு போட்டிக்கு 5 கிலோ மீட்டர் தூரம் நிர்ணயிக்கப்பட்டு விளாத்திகுளம் வேம்பார் சாலையில் போட்டியானது நடைபெற்றது. நடைபெற்ற மாட்டுவண்டிகள் பந்தயத்தை விளாத்திகுளம் அதிமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு, பரிசுத்தொகை மற்றும் குத்துவிளக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிமுக ஒன்றிய செயலாளர் பால்ராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மேற்பார்வையாளர் மீனாட்சிசுந்தரம், விழா ஏற்பட்டளர்கள் திமுக சமூகவலைதள பொறுப்பாளர் சடையாண்டி வினோத் மீனாட்சி, BSNL சண்முகவேல், மருதுபாண்டி, மாடசாமி, அருண்குமார், கதிர்வேல், முனீஸ்வரன், திருக்கார்த்திக்குமார், நவீத், சுரேஷ்குமார், கருப்பசாமி உள்ளிட்ட விழா கமிட்டியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை போட்டி நடைபெற்றதால் சாலையின் இருபுறமும் சுமார் 8 கிலோ மீட்டர் வரை நின்று பார்வையாளர்கள் போட்டியை கண்டு ரசித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.