தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஓட்டப்பிடாரம் மேற்கு பகுதி செயலாளருமான மோகன் தலைமையில் ஓட்டப்பிடாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு மற்றும் முன்னாள் அமைச்சரும் , தலைமை செயற்குழு உறுப்பினரும், மகளிர் அணி துணைச் செயலாளருமான ராஜலட்சுமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் .
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில்கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், அண்ணா திமுகவில் உழைப்பால் பதவி கிடைக்கும் ஆனால் திமுகவில் பிறப்பால் பதவி கிடைக்கும் ஏனெனில் திமுகவில் கருணாநிதிக்கு மகனாக பிறந்ததினால் ஸ்டாலின் முதலமைச்சர். மு க ஸ்டாலினுக்கு மகனாக பிறந்ததினால் உதயநிதிக்கு துணை முதலமைச்சர். ஆனால் திமுகவில் பிறப்பால் கட்சிப் பதவி கிடைக்கிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி சாதாரண தொண்டனாக இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஆக முதலமைச்சர் பதவியை அடைந்தார் மேலும் அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார் அதனால் அதிமுகவில் உழைப்பால் பதவி கிடைக்கிறது.
தூத்துக்குடியில் திமுக மாவட்ட செயலாளர் ஆக பெரியசாமி அவருக்கு பின் கீதாஜீவன், பெரியசாமி மகன் மேயர் ஆக அது ஒரு குடும்ப கட்சி. தலைமையில் இருந்து கீழ வரைக்கும் அந்த கட்சியினுடைய நிலைமை அதுதான. 2026 சட்டமன்ற தேர்தல் என்பது திமுகவிற்கு சோதனை காலம் அதிமுகவிற்கு சாதனை காலம் காலமாக இருக்கும். அதிமுக ஆரம்பிச்சு கட்சி ஆரம்பித்து 53 வருடங்கள் ஆகிறது. வருகிற 17-ஆம் தேதி அதிமுகவிற்கு பிறந்தநாள். அதிமுக கட்சியின் பிறந்தநாள் என்பது ஒவ்வொரு தொண்டனுக்கும் பிறந்தநாள் என்ற வகையில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் அதன் அடிப்படையில் வீடுகளில் அதிமுக கொடி ஏற்ற வேண்டும் அது நமக்குப் பெருமை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழ்நாட்டில் 32 வருடங்கள் ஆட்சியில் இருந்த இயக்கம் அதிமுக. மேலும் திமுக ஆட்சியில் திருது 500 வாக்குறுதிகளில் இருவது 20 வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை.500 வாக்குறுதிகள் என்ன ஆச்சு. ஸ்டாலின் அண்ணாச்சி ஸ்டாலின் அண்ணாச்சி என போன தேர்தலில் பாட்டு பாடினீர்கள். வருகின்ற தேர்தலில் ஸ்டாலின் அண்ணாச்சி ஸ்டாலின் அண்ணாச்சி 500 வாக்குறுதிகள் என்ன ஆச்சு என மக்கள் பாட்டு பாடுவார்கள். மேலும் 500 வாக்குறுதிகள் என்ன ஆச்சு ஸ்டாலின் அண்ணாச்சி என மக்கள் கேட்கின்ற காலம் தான் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு பாலியல் வன் கொடுமை போதைப்பொருள் நடமாட்டங்கள் கட்டுப்படுத்த முடியாமை கள்ளச்சாராய உயிரிழப்புகள் மின் கட்டண உயர்வு நீட் தேர்வு ரத்து பால் விலை உயர்வு போன்ற திமுக ஆட்சியின் அவலங்களை பொதுமக்களிடம் சேர்க்க வேண்டும் மேலும் சிறப்பாக நாம் பணியாற்றினால் நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம் தமிழகம் முழுவதும் நேற்று அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது அந்த எழுச்சியை பார்த்துவிட்டு திமுக அமைச்சர்கள் இனிமேல் பொய்யான தகவலை சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்துவதை நிறுத்த வேண்டும் என கூறுகிறார்கள் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என கூறுவதற்கு திமுகவினருக்கு என்ன உரிமை இருக்கிறது மேலும் இந்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் திமுகவை நடுங்க செய்திருக்கிறது என பேசினார் .
இந்நிகழ்ச்சியில் கருங்குளம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பரமசிவன், வடக்கு மாவட்ட இணை செயலாளர் பேச்சியம்மாள் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜேந்திரன், வடக்கு மாவட்ட பொருளாளர் ஆரோன்மோசஸ், நகரச்செயலாளர் ஆறுமுகசாமி, வடக்கு மாவட்ட மீனவர் அணி செயலாளர் ஆலோசனை மரியான், வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட செயலாளர் ஜாக்சன் துரைமணி, பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி, மாவட்ட பிரதிநிதி மணி, எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கோபி ,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வடக்கு மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் சின்னதுரை, மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜேஷ்குமார், மேற்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் தினேஷ்குமார், வடக்கு மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் முத்துசாமி, ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜஸ்டின் திரவியம், மேற்குஒன்றியகழக துணைச்செயலாளர் ஆதிலிங்கம், வடக்கு மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் ரவி, மேற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர்.கண்ணன் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-எஸ்.நிகில், ஓட்டபிடாரம் .