கோவை மாவட்டம் பொள்ளாச்சி நெகமம் காளியப்பன்பாளையம் கல்லாங்காட்டை சேர்ந்தவர் கணேஷ். இவருக்கு நெகமத்தில் பொள்ளாச்சி பல்லடம் திருப்பூர் ரோட்டில் வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் ஹோட்டல் நடத்தி வருபவர் தர்சன்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் இந்த ஹோட்டலுக்கு தினந்தோறும் நேபாளியை சேர்ந்த 16 வயது சிறுவன், தான் பணியாற்றும் கடையிலிருந்து சிக்கன் கொடுத்து வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 25 தேதி இரவு சிறுவன் ஹோட்டலுக்கு சென்று உள்ளார். அப்போது ஹோட்டல் பூட்டி இருந்த நிலையில் சிறுவன் பின்பக்கமாக சென்று கதவை திறந்து உள்ளே சென்று அங்கிருந்த உணவை சாப்பிட்டு விட்ட வந்ததாக கூறப்படும் நிலையில் மறுநாள் காலையில் ஹோட்டல் ஊழியர்கள் வழக்கம் போல ஹோட்டலை திறந்து உள்ளனர்.
அப்போது பின் பக்கம் கதவு திறந்து உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அங்கிருந்த கல்லாவை பார்த்து உள்ளனர். அதில் இருந்த ரூபாய் 10 ஆயிரத்தை காணவில்லை.
அங்கிருந்த சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்தப் பொழுது சிறுவன் வந்து சென்றது தெரியவந்தது. மேலும் அங்கிருந்த பணத்தை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆத்திரமடைந்த வணிகவளாக உரிமையாளர் கணேஷ், ஹோட்டல் மாஸ்டர் ஓம்பிரகாஷ், ஹோட்டல் நடத்தும் தர்ஷன் ஆகியோர் சிறுவன் வேலை பார்த்து வரும் கோழிக்கடைக்கு சென்று அங்கிருந்த சிறுவனை அழைத்து வந்து கயிற்றால் கை,கால்களை கட்டி தாக்கியுள்ளனர். இதில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் கயிறு கட்டிய நிலையிலேயே சிறுவனை நெகமம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கணேஷ், ஓம்பிரகாஷ், தர்ஷன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் சிறுவனை பொதுமக்கள் முன்னிலையில் கையில் கயிறு கட்டி வணிகவளாக உரிமையாளர் இழுத்து வரும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M. சுரேஷ்குமார்.