தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக கோவை மாவட்டம் இருந்து வருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இருந்து சத்தியமங்கலம் வரை நான்கு வழி சாலை அமைக்க கடந்த அதிமுக ஆட்சியின் போது திட்டமிடப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் பல்வேறு காரணங்களால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இவ்வாறு இருக்கும் நிலையில் சுமார் ஐந்து ஆண்டுகள் கழித்து அந்த திட்டம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழ்நாட்டின் தொழில் துறை முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தி முதலீடுகள் அதிக அளவில் பெறப்பட்டு வருகின்றன. மற்றொரு பக்கம் தொழில்துறையினருக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து அதிகப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக முக்கியமாக சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சரக்குகளை வேகமாகவும் மிகவும் குறைந்த செலவிலும் விரிவாக எடுத்துச் செல்ல முடியும். அதேபோன்று கோவை முதல் சத்தியமங்கலம் வரை நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் இருந்து வருகிறது. ஐடி துறை மட்டுமின்றி பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கும் முக்கியமான இடமாக கோவை மாவட்டம் இருக்கிறது. இதன் காரணமாகவே கோவை மாவட்டத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சரக்குகளை எளிதாக கொண்டு செல்ல சாலை திட்டங்கள் அனைத்தும் தேவைப்பட்டு வருகின்றன.
இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு சாலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் இருந்து சத்தியமங்கலம் வரை குறிப்பாக தமிழ்நாடு கர்நாடகா எல்லை வரை பகுதியை இணைக்கும் வகையில் கிரீன் பீல்ட் எனப்படும் நான்கு வழிச்சாலை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பு சுமார் 1912 கோடி ஆகும்.
இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பிரிவை மாநில அரசு அமைக்க வேண்டி இருந்ததால் இந்த திட்டம் கடந்த சில ஆண்டுகளாக தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நிலம் கையகப்படுத்தும் பிரிவு அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்து இருப்பதால் இந்த திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. விரைவில் கோவை மாவட்ட ஆட்சியர் அதற்கான அதிகாரிகளை நியமிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாதத்தில் இந்த பணிகள் எல்லாம் நிறைவடையும். அதன் பிறகு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை மாவட்டத்திலிருந்து சத்தியமங்கலம் வரை 96 கிலோ மீட்டருக்கு புதிய சாலை அமைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதன்படி கோவை மாவட்டத்திலிருந்து சத்தியமங்கலம் மலையடிவாரம் வரை இது நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படும். அங்கிருந்து கக்கனல்லா எல்லை வரை இரண்டு வழிச்சாலையாகவும் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு சுமார் 4000 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அந்த நிலத்தை கையகப்படுத்த ஒன்றிய அரசு சார்பில் சுமார் 640 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.