கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தளமான மூணாறு பகுதியில் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். சுற்றுலா சிறப்பு காலங்களில் வாகன நெரிசல்கள் ஏற்படுவது சகஜம் சாலையோரத்தில் கடைகளை அமைத்து சாலைகளை ஆக்கிரமிப்பதால் வாகனங்கள் செல்ல தடை ஏற்படுகிறது எனவும் இதனால் சாலையோரங்களில் உள்ள கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உடனடியாக மூணார் பஞ்சாயத்தில் சார்பாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர் தற்பொழுது மீண்டும் சாலை ஓரக்கடைகள் உருவாக துவங்கி உள்ளது சாலையோர கடைகளை அனுமதிக்க கூடாது என மூணார் பஞ்சாயத்துக்கு பல தரப்பிலும் இருந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.
ஆனாலும் ஆக்கிரமித்து தொடங்கப்படும் கடைகளை தடுப்பதற்கு எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நேற்று மூணாறில் உள்ள உள்ள மூணார் வியாபார சங்கத்தின் சார்பாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு சரியான தீர்வு காணவில்லை என்றால் உடனடியாக மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் வியாபார சங்கத் தலைவர் கூறியுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணாறு.