கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் அருகே உள்ள சந்தன மரக்காட்டில் சந்தனமரம் தொடர்ச்சியாக திருடப்பட்ட உள்ள நிலையில் தற்பொழுது சந்தன மரங்களை வெட்டி கடத்தியது தெரியவந்துள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதுவரையில் 19 நபர்களை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக சந்தன மரங்கள் கடத்தப்பட்டு வருவது தெரிய வந்ததை அடுத்து வனத்துறை தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.
கேரளா வனசரகததிற்குட்டபட்ட பகுதி மற்றும் தனியார் நிலத்தில் உள்ள சந்தன மரங்களும் மர்மமான முறையில் வெட்டி கடத்தப்பட்டது. தொடர் கதையாக இருந்த நிலையில் அடிமாலியில் செய்த சோதனையில் லிஜு மற்றும் மணிகண்டன் என்ற இருவர் காவல்துறையிடம் மாட்டிக்கொண்டனர்.
இதை தொடர்ந்து விசாரனை மற்றும் ரகசிய தகவலின் அடிப்படையில் தொடர் முயற்சியால் சுமார் பத்தொன்பது நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தன மரம் பழைய பொருட்களை வாங்கும் வண்டிகளின் மூலமாக கடத்தியது அம்பலமாகியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணாறு.