௧ோவை மாவட்டம் வால்பாறை சின்கோனா தேயிலை தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி ராயன் டிவிசன் தேயிலைத் தோட்ட தொழிற்சாலையில் வால்பாறை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் நித்யா அவர்கள் ஆலோசனையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் சித்த மருந்துகள் வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனைத் தொடர்ந்து பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பால்வினை நோய் போன்ற தொற்றுகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அரசு மருத்துவமனை நம்பிக்கை மையம் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் செவிலியர் பாலமுருகன் ஆய்வக நுட்புணர் மணி ஆயுஷ் சிகிச்சையாளர் ராம்குமார் சுகாதார ஆய்வாளர் இனியவன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர் மேலும் இந்நிகழ்ச்சியில் தோட்டத் தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இது போன்ற நிகழ்வு தொடர வேண்டும் என்பதே தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-P. பரமசிவம் வால்பாறை.