கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் ரோடு ஜே ஜே நகர் பகுதியில் இன்று காலை செட்டிபாளையம் செல்லும் எட்டாம் நம்பர் பேருந்து செட்டிபாளையம் சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென இருசக்கர வாகனம் பஸ் பின்புறம் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பொள்ளாச்சி செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் தாய், மகன் இருவரும் வந்து கொண்டிருந்தனர். திடீரென இருசக்கர வாகனம் பஸ்ஸின் பின்புறம் வேகமாக மோதியது. இருசசக்ர வாகனத்தை வேகமாக இயக்கியதாக தெரிகிறது. இதில் தாய் மகன் இருவரும் தூக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்தில் உயிர் சேதம் இல்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
போத்தனூர் செட்டிபாளையம் ரோடு ஆனது போத்தனூரில் இருந்து பல்லடம் திருப்பூர் திருச்சி வரை இணைக்கக்கூடிய சாலையாக உள்ளது. இதில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அதிக வேகத்துடன் பயணிக்கின்றனர். இது போன்ற வாகன விபத்துகள் செட்டிபாளையம் சாலையில் அதிகமாக நடப்பதால் வாகன ஓட்டிகள் 40 முதல் 60 வரை வேகத்தை கட்டுக்குள் கொண்டு வந்து கவனமாக செல்ல வேண்டும் என்று காவல் துறையினால் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ரகுமான்.