ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் ஆஸ்திரேலியா பௌலர்களின் வேகத்தை தாக்குபிடிக்க முடியாமல் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் மார்ஷ்
தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் சேர்த்திருந்தது. 3 விக்கெட்டுகள் கைவசம் இருந்த நிலையில் இரண்டாவது நாளை களம் கண்ட ஆஸ்திரேலியா கூடுதலாக 37 ரன்கள் சேர்த்த நிலையில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதியில் அந்த அணி 104 ரண்களுக்கு சுருண்டது.
இந்தியா தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளும், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர். ஆஸ்திரேலியாவை விட இந்தியா 46 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
-அருண்குமார், கிணத்துக்கடவு.